​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆட்டோ மீது காரை மோதிய போதை ஆசாமி

Published : Jun 25, 2019 7:17 AM



ஆட்டோ மீது காரை மோதிய போதை ஆசாமி

Jun 25, 2019 7:17 AM

சென்னை, நீலாங்கரை பகுதியில், ஆட்டோ மீது காரை மோதிய போதை ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.

நீலாங்கரை இசிஆர் சாலையில், இன்று அதிகாலை 2.30 மணியளவில், கார் ஒன்று வேகமாக வந்தது. கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் நின்றிருந்த ஆட்டோ மீது மோதியது. பின்னர் அங்கிருந்த சுவர் மீது மோதி கார் நின்றது. இதில், ஆட்டோ ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். விபத்தை ஏற்படுத்திய நபரை பிடித்து அங்கிருந்த போலீசார் விசாரித்தபோது, போலீசாரை அவர் தகாத வார்த்தைகளால் பேசி தகராறில் ஈடுபட்டார். 


இதையடுத்து, அந்த நபரை கைது செய்த நீலாங்கரை போலீசார், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.