​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
24 மணி நேரத்தில் கொலை கொள்ளை சம்பவங்களில் 9 பேர் உயிரிழப்பு

Published : Jun 24, 2019 7:24 AM

24 மணி நேரத்தில் கொலை கொள்ளை சம்பவங்களில் 9 பேர் உயிரிழப்பு

Jun 24, 2019 7:24 AM

டெல்லியில் ஒரே நாளில் அடுத்தடுத்து வெவ்வேறு இடங்களில் 9 கொலைகள் நடந்திருப்பதால் பீதி அதிகரித்துள்ளது.

வசந்த விஹார் பகுதியில் வசித்து வந்த வயது முதிர்ந்த தம்பதியும் அவர்களுக்கு உதவியாக இருந்த பணிப்பெண்ணும் கொடூரமான முறையில் கழுத்து அறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தனர்.

இதுபோன்ற மேலும் சில சம்பவங்களில் ஒரே நாளில் 9 பேர் உயிரிழந்தனர். இது குறித்து டிவிட்டரில் தமது கவலையை தெரிவித்த முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி மக்கள் தங்கள் பாதுகாப்புக்காக யார் கதவைத் தட்டுவது என்று போலீசார் மீது கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

ஆனால் டெல்லியில் குற்றங்கள் அதிகரிக்கவில்லை என்று மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை சார்பில் புள்ளி விவரத்துடன் மறுப்பு வெளியாகியுள்ளது.