​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மலைமுகடுகளில் இருந்து பாறைகளில் விழுந்த கார்

Published : Jun 24, 2019 7:22 AM



மலைமுகடுகளில் இருந்து பாறைகளில் விழுந்த கார்

Jun 24, 2019 7:22 AM

இங்கிலாந்தில் மலைமுகட்டில் இருந்து விழுந்து கார் சுக்கல் சுக்கலாக நொறுங்கி விட அதன் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

சவுத் டைனிசைட் ((South Tyneside)) என்ற இடத்தில் கடற்கரையோரம் இருந்த மலைமுகடுகளை உள்ளடக்கிய சாலை ஒன்று உள்ளது. இந்தச் சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சுமார் 60 அடி உயரத்தில் இருந்து விழுந்தது. இந்த விபத்தில் பாறைகள் மீது மோதி கார் சுக்கல் சுக்கலாக நொறுங்கியது.

இதுகுறித்து தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். விபத்தில் சிக்கிய கார் முற்றிலுமாக நொறுங்கிய போதிலும் அதிலிருந்த ஓட்டுநர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டார்.