​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழக கேபினெட் கூட்டம் இன்று நடக்கிறது

Published : Jun 24, 2019 7:18 AM



தமிழக கேபினெட் கூட்டம் இன்று நடக்கிறது

Jun 24, 2019 7:18 AM

மிழக அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று நடைபெறுகிறது.

சட்டப்பேரவை வருகிற 28ந் தேதி கூடும்போது, துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதத்தில் பங்கேற்று உறுப்பினர்கள் பேசியபின், அமைச்சர்கள் அவற்றுக்கு பதிலளித்து அறிவிப்புகளை வெளியிடுவார்கள்.

இந்நிலையில், பேரவையில் புதிய அறிவிப்புகள் வெளியிடுவது குறித்து இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

எவ்வளவு நிதி ஒதுக்குவது என்பது குறித்தும், மசோதாக்களை நிறைவேற்றுவது குறித்தும் ஆலோசனை நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, தமிழக சட்டசபை கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது?, எந்தெந்த நாட்களில் எந்த துறைகளின் மானிய கோரிக்கை மீது விவாதம் நடத்துவது? என்பது குறித்து ஆலோசிப்பதற்காக, அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் சபாநாயகர் ப.தனபால் தலைமையில் இன்று நடைபெறுகிறது.