​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
900 ஆண்டுகள் பழமையான பரசுராமலிங்கேஸ்வரர் கோயில் குளத்தை தூர் வாரி சுத்தப்படுத்தும் மக்கள்

Published : Jun 23, 2019 6:13 PM

900 ஆண்டுகள் பழமையான பரசுராமலிங்கேஸ்வரர் கோயில் குளத்தை தூர் வாரி சுத்தப்படுத்தும் மக்கள்

Jun 23, 2019 6:13 PM

சென்னை அயனாவரத்தில் 900 ஆண்டுகள் பழமையான பரசுராமலிங்கேஸ்வரர் கோயில் குளத்தை மக்கள் தூர் வாரி சுத்தப்படுத்தினர்.

கடந்த 2007-ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் இந்தக் குளத்தை இப்பகுதி மக்கள் தூர்வாரி சுத்தம் செய்து வருகின்றனர். மழை பெய்யும் போது 20க்கும் மேற்பட்ட தெருக்களில் இருந்து வரும் மழைநீரை கழிவுநீர் கலக்காமல் இந்த குளத்தில் சேகரிப்பதால் 2 ஏக்கர் பரப்பளவுள்ள இந்தக் குளம் வற்றாமல் இருப்பதாகத் தெரிவிக்கும் மக்கள், அரசாங்கத்தை சார்ந்து இருக்காமல் குளத்தை தாங்கள் பராமரிப்பதாகவும், நிலத்தடி நீர்மட்டமும் பாதுகாக்கப்படுவதாகவும் கூறுகின்றனர். பெரிய பெரிய ஏரிகளே வற்றிவிட்ட நிலையில் 27 அடி ஆழமுள்ள கோயில் குளம் வற்றாமல் உள்ளது.