​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இந்திய அணி கேப்டன் விராட் கோலிக்கு அபராதம்

Published : Jun 23, 2019 3:46 PM

இந்திய அணி கேப்டன் விராட் கோலிக்கு அபராதம்

Jun 23, 2019 3:46 PM

இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான கிரிக்கெட் போட்டியின் போது ஐசிசி நன்னடத்தை விதிகளை மீறியதற்காக இந்திய அணி கேப்டன் விராட் கோலிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமையன்று இங்கிலாந்தின் சவுத்ஹாம்டனில் நடைபெற்ற போட்டியில் எல்பிடபிள்யூ வழங்குவது தொடர்பாக நடுவராக இருந்த அலீம் தர்ரை நோக்கி விராட் கோலி ஆக்ரோஷமாக முறையிட வந்ததற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போட்டியில் விராட் கோலிக்கு கிடைக்கும் தொகையில் 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தவறை கோலி ஒப்புக் கொண்டதால் மேற்கொண்டு எந்தவித அதிகாரப்பூர்வ விசாரணையும் தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நன்னடத்தை விதிகளை மீறியதற்காக வழங்கப்படும் டிமெரிட் புள்ளி ஒன்றையும் கோலி பெற்றார்.

ஒரு வீரர் 24 மாத காலத்திற்குள் 4 அல்லது அதற்கு மேற்பட்ட புள்ளிகளை பெற்றால் போட்டியில் விளையாட தடை விதிக்கப்படும். ஏற்கனவே 2018 ஆம் ஆண்டு பிரிடோரியாவில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியின் போது விராட்கோலிக்கு ஒரு டிமெரிட் புள்ளி வழங்கப்பட்டது.