​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ரஷ்ய விமானங்கள் ஜார்ஜியா செல்ல தற்காலிக தடை

Published : Jun 22, 2019 4:59 PM

ரஷ்ய விமானங்கள் ஜார்ஜியா செல்ல தற்காலிக தடை

Jun 22, 2019 4:59 PM

ஜார்ஜியா நாட்டு மக்களின் போராட்டத்தை தொடர்ந்து, ரஷ்யாவிலிருந்து ஜார்ஜியா செல்லும் பயணிகள் விமானத்துக்கு, ரஷ்ய அதிபர் புதின் தற்காலிக தடை விதித்துள்ளார். அமெரிக்காவின் ஆதரவு நாடான ஜார்ஜியாவுக்கு, அண்மையில் ரஷ்யா நாடாளுமன்ற உறுப்பினர் செர்ஜே காவ்ரிலோவ் (sergey gavrilov) சென்று, உரையாற்றினர்.

இதற்கு கண்டனம் தெரிவித்து, ஆயிரக்கணக்கான மக்கள் ஜார்ஜியா நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பெரும் கலவரம் வெடித்தது. இந்தநிலையில், ஜார்ஜியாவுக்கு செல்லும் ரஷ்யா பயணிகள் விமானங்களுக்கு அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் இடைக்கால தடை உத்தரவிட்டுள்ளார். இந்த தடை உத்தரவானது வருகிற ஜூலை 8ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.