​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அணு உலையில் விமானம் கொண்டு மோத முடியுமா ? சீமான் சவால்

Published : Jun 21, 2019 9:39 PM

அணு உலையில் விமானம் கொண்டு மோத முடியுமா ? சீமான் சவால்

Jun 21, 2019 9:39 PM

ணு உலை பாதுகாப்பானது என்றால் கூடங்குளம் அணு உலை மீது விமானத்தை மோதி நிரூபித்துக்காட்டுங்கள் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்..

கூடங்குளத்தில் அணுகழிவு மையம் அமைப்பதற்கு எதிராக, நாம் தமிழர் கட்சியின் சார்பில் நடந்த சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முழங்கிய சீமான் , கூடங்குளம் அணு உலை பாதுகாப்பானது என்றால் அதன் மீது விமானத்தை மோதி நிரூபித்துக்காட்டுங்கள் என்றார்...

அணு உலை மூலம் கிடைக்கின்ற மின்சாரம் தனக்கு தேவையில்லை என்றும் கொசுக்கடியில், விசிறி வீசிக்கொண்டு தன்னால் வாழமுடியும் என்றும் சீமான் அறிவித்தார்.

அணுக்கழிவு பாதுகாப்பானது என்றால் அதனை பந்து போல உருட்டிச்சென்று பாராளுமன்றத்துக்குள்ளோ அல்லது சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள தலைவர்கள் சமாதிக்கு அருகிலோ புதைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அதே போல ஒரே தேர்தல் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்த சீமான், வேலூர் எம்.எல்.ஏ இறந்து விட்டதாக தவறாக கூறியதால் சல சலப்பு ஏற்பட்டது. பின்னர் அவர் கூட்டத்தினரிடம் கேட்டு தெரிந்து கொண்டார்.

அதே போல அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்பாலாஜியை, கரூர் சட்டமன்ற உறுப்பினர் என்று தவறாக உச்சரித்த சீமான், செந்தில் பாலாஜிக்காக கடந்த காலத்தில், தான் வாக்கு சேகரித்தை நினைவு கூர்ந்தார்.

ஒரு கட்டத்தில் பாரதீய ஜனதாவின் பொன் ராதாகிருஷ்ணனை தனது அண்ணன் என்றும் தங்கள் உறவை யாரும் மாற்ற முடியாது என்றும் முழங்கினார்.