​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ரத யாத்திரையில் அலங்காரத்திற்காக யானைகளை அனுப்ப எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு

Published : Jun 21, 2019 4:52 PM

ரத யாத்திரையில் அலங்காரத்திற்காக யானைகளை அனுப்ப எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு

Jun 21, 2019 4:52 PM

குஜராத்தில் நடைபெறும் ரத யாத்திரையில் அலங்காரத்திற்காக பயன்படுத்த யானைகளை அனுப்பி வைக்க அசாம் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

அகமதாபாத்தில் உள்ள ஜெகநாதர் கோவிலில் நடைபெறும் ரத யாத்திரை விழாவில், அலங்காரத்திற்காக அசாமிலிருந்து 4 யானைகளை அனுப்பி வைப்பதற்கான முயற்சிகள் நடைபெற்றுவருகிறது.

வடமாநிலங்களில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருவதோடு, வெப்ப அலைகளும் வீசி வருகின்றன. இந்தநிலையில் ரயில் மூலம் யானைகளை அழைத்து செல்வது, அவற்றின் உடல்நிலையை பாதிக்கும் என விலங்குகள் நல ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அவர்களுடன் இணைந்து அசாம் எதிர்கட்சியினரும், இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசை வலியுறுத்தி வருகின்றனர். வடகிழக்கு மாநிலமான அசாமிலிருந்து, நாட்டின் மேற்கு எல்லையில் உள்ள குஜராத்திற்கு செல்வதற்கு, அந்த யானைகள் சுமார் மூவாயிரத்து 100 கிலோ மீட்டர் பயணிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.