​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பள்ளிக் குழந்தைகளுக்கு பந்துவீசிய விராட் கோலி..!

Published : Jun 21, 2019 4:48 PM

பள்ளிக் குழந்தைகளுக்கு பந்துவீசிய விராட் கோலி..!

Jun 21, 2019 4:48 PM

இங்கிலாந்தில் நடந்த நிகழ்ச்சியில் பள்ளிக் குழந்தைகளுடன் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் நேரம் செலவிட்டனர்.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்றிருக்கும் அணி வீரர்கள் பள்ளி குழந்தைகளை சந்திக்கும் கிரிக்கெட் கிளீனிக் என்ற நிகழ்ச்சியை ஐசிசி நடத்தி வருகிறது.

அதன்படி சவுத்தாம்டனில் உள்ள ஹாம்ஸ்பியர் பவுல் மைதானத்தில் 30 பள்ளி குழந்தைகளுடன் இந்திய அணி வீரர்களான விராட் கோலி, கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் நேரம் செலவிட்டனர். அப்போது கேப்டன் விராட் கோலி குழந்தைகளுக்கு பந்துவீசினார்.

பின்னர் பேசிய கோலி, குழந்தைகளின் வாழ்க்கையில் கிரிக்கெட் மிக பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று தான் நம்புவதாக கூறினார்.