​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பரோல் கோரும் கொலைகார சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங்

Published : Jun 21, 2019 4:45 PM

பரோல் கோரும் கொலைகார சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங்

Jun 21, 2019 4:45 PM

ஹரியானாவில் மோசடி சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங், பரோல் கோரி விண்ணப்பித்துள்ளார்.

பக்தைகளை பாலியல் பலாத்காரம் செய்தது, அதை வெளியிட்ட பத்திரிக்கையாளரைக் கொன்றது உள்ளிட்ட பல்வேறு குற்றம்சாட்டப்பட்ட குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கு கடந்த ஆண்டு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

சுனைரா சிறையில் கைதியாக உள்ள குர்மீத் அங்கு தோட்ட வேலைகளைப் பார்த்து வருகிறார். தனது சொந்த ஊரில் உள்ள தனது நிலம் தரிசாகக் கிடப்பதாகவும், அதில் தாம் விவசாயம் செய்ய விரும்புவதாகவும் கோரி குர்மீத் பரோல் கோரியுள்ளார்.

பரோல் கோரிக்கையை சுனைரா சிறை நிர்வாகம், மாவட்ட நிர்வாகத்துக்கு அனுப்பியுள்ளது. மாவட்ட நிர்வாகம் அனுமதித்த பின் அந்த பரோல் மனு ஹரியானா அரசின் கவனத்துக்கு செல்லும்.