​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பால் வீணாகும் தண்ணீர்

Published : Jun 21, 2019 8:53 AM

குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பால் வீணாகும் தண்ணீர்

Jun 21, 2019 8:53 AM

நாகை மாவட்டம் சீர்காழி அருகே கெயில் குழாய் புதைக்கும் போது கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் குழாய் உடைந்ததால் இரண்டு நாட்களாக தண்ணீர் வீணாகிறது.

ஜேசிபி இயந்திரத்தைக் கொண்டு குழி தோண்டிய போது சாலையின் அருகே புதைக்கப்பட்டிருந்த கூட்டுக் குடிநீர் குழாயை கெயில் நிறுவனத்தினர் உடைத்து விட்டனர்.

இதனால் தண்ணீர் வெள்ளம் போல் பாய்ந்து வீணாகிக் கொண்டிருக்கிறது. உடைந்த குழாயை கெயில் நிறுவனத்தினர் கண்டுகொள்ளாமல் குழாய் புதைக்கும் பணியை நிறுத்தி விட்டு சென்றதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இப்படி வீணாகும் தண்ணீரால் 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.