​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
காவல் நிலையத்தில் மூலிகை பண்ணை ..! குவிகின்றது பாராட்டு

Published : Jun 21, 2019 8:26 AM



காவல் நிலையத்தில் மூலிகை பண்ணை ..! குவிகின்றது பாராட்டு

Jun 21, 2019 8:26 AM

சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் காவலர்களின் மன அழுத்தத்தை குறைப்பதற்காக நடைபாதையுடன் கூடிய மூலிகை பண்ணை ஒன்றை அமைத்துள்ள காவல் ஆய்வாளருக்கு பாராட்டுக்கள் குவிகின்றன.

சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தின் பின்புறம் குப்பை கூலமாக பராமரிப்பின்றி கிடந்த 1 கிரவுண்டு இடத்தில் தான் இந்த மூலிகை பண்ணையை உருவாக்கி இருக்கிறார் காவல் ஆய்வாளர் முரளி..!

புதர்மண்டிய இடத்தை சுத்தப்படுத்தி தோட்டம் அமைக்கலாம் என்று முடிவெடுத்த அவர், தினமும் மன அழுத்தத்தால் பாதிக்கப்படும் காவல்துறையினருக்கு மனசோர்வை நீக்கும் வகையில் மருத்துவ குணம் கொண்டதாக அமைக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளார். அதன் படி 15 வகையான மூலிகை செடிகளை நட்டு சிறிய மூலிகை பண்ணையை உருவாக்கியதாக கூறப்படுகிறது.

இங்கு துளி, சோத்து கற்றாலை,துளசி,லெமன்கிராஸ்,வில்வம்,ஒற்றை செம்பருத்தி,தூதுவளை,சிறியா நங்கை, பெரியா நங்கை,நிலவேம்பு,சர்க்கரை வியாதியை குணமாக்கும் இன்சுலினி உள்ளிட்ட 15 வகையான மூலிகை செடிகளுக்கும் தெளிப்பு நீர் பாசனம் மூலம் தண்ணீர் பாய்ச்சுகின்றனர்.

தினமும் வழக்கு விசாரணை, தேடுதல் வேட்டை, ஏமாற்றம் என்று கடுமையான மன உளைச்சலுடன் பணி செய்துவரும் காவல்துறையினர் 5 நிமிடம் இந்த மூலிகை பண்ணைக்குள் நுழைந்தால் போதும், மன சோர்வு நீங்கி புது தெம்பு கிடைக்கும் என்று சுட்டிக்காட்டுகின்றனர்.

மரங்களை அழித்து காசு பார்ப்பதில் ஆர்வம் காட்டும் நேரத்தில், காவல் நிலைய வளாகத்தில் மூலிகை பண்ணை அமைத்து மற்ற காவல் நிலையங்களுக்கு முன் உதாரணமாக திகழும் காவல் ஆய்வாளர் முரளி பாராட்டுக்கு உரியவர் என்பதில் ஐய்யமில்லை..!