​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஜெட்ஏர்வேஸ் நிறுவன பங்குகள் விலை ஒரே நாளில் 123% அதிகரிப்பு

Published : Jun 20, 2019 7:38 PM

ஜெட்ஏர்வேஸ் நிறுவன பங்குகள் விலை ஒரே நாளில் 123% அதிகரிப்பு

Jun 20, 2019 7:38 PM

திவால் நிலைக்குச் சென்றுவிட்டு ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு, ஒரே நாளில் 123 விழுக்காடு அளவிற்கு உயர்ந்திருக்கிறது.

சம்பளப் பிரச்னை, விமான எரிபொருளுக்கு கடன் பாக்கி, ஹெச்எஸ்பிசி (HSBC) வங்கியிடம் வாங்கிய 140 மில்லியன் டாலர் வெளிநாட்டு கரன்ஸி கடன் பாக்கி, விமானங்களுக்கான குத்தகைத் தொகை பாக்கி, பயணிகளுக்கான ரீஃபண்ட் (Refund) தொகை பாக்கி என அடுத்தடுத்த நெருக்கடிகளால், ஜெட் ஏர்வேஸ் தனது சேவையை முற்றாக நிறுத்திக் கொண்டது.

கடனிலிருந்து ஜெட் ஏர்வேசை மீட்டெடுக்க எஸ்.பி.ஐ தலைமையிலான 26 வங்கிகள் அடங்கிய கூட்டமைப்பு முடிவு செய்தது. ஆனால், இவர்கள் எதிர்பார்த்த அளவிற்கு, ஜெட் ஏர்வேஸ் பங்குகள் விற்பனையாகவில்லை. இதனால், நிதி இன்றி, இயங்க முடியாமல் செயலிழந்துபோகும் நிறுவனங்களை திவாலானதாக அறிவிக்கும், தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயத்திற்கு, ஜெட் ஏர்வேஸ் பிரச்சினையை, 26 வங்கிகள் கூட்டமைப்பு கொண்டு சென்றன.

இதையடுத்து, தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயமும், தனது முடிவை கூறுவதாக அறிவித்தது. இந்த அறிவிப்பு வெளியான உடன், புதன்கிழமை சரிவுடன் முடிந்திருந்த ஜெட் ஏர்வேஸ் பங்குகளின் மதிப்பு, வியாழக்கிழமை, படிப்படியாக உயரத் தொடங்கின.

வர்த்தக நேர முடிவில், 123 விழுக்காடு அளவிற்கு ஜெட் ஏர்வேஸ் பங்குகள் விலை உயர்ந்தன. தேசிய பங்குச்சந்தையில், ஜெட் ஏர்வேஸ் பங்குகள் விலை 73 ரூபாய் 80 காசுகளாக நிலைபெற்றது.