​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வேத இல்ல வழக்கில் திடீர் திருப்பம்...!

Published : Jun 20, 2019 7:18 PM

வேத இல்ல வழக்கில் திடீர் திருப்பம்...!

Jun 20, 2019 7:18 PM

ஜெயலலிதாவின் வேத நிலையம் இல்லத்தை அரசு நினைவிடமாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்த வழக்கு மீதான விசாரணையை வேறு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்ற நீதிபதி மணிக்குமார் தலைமையிலான அமர்வு தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி உள்ளிட்டோர் , அரசு செலவில் ஜெயலலிதா வீட்டை நினைவிடமாக மாற்ற எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் இது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும் எனவும் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ். மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, இந்த அமர்வில் உள்ள ஒரு நீதிபதி ஏற்கனவே ஜெயலலிதாவுக்காக உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளார் எனவும் அதனால் இந்த வழக்கை தொடர்ந்து இந்த அமர்வு விசாரிக்கவில்லை எனவும் நீதிபதிகள் கூறினர்.

மேலும் வேறு நீதிபதிகள் அமர்வுக்கு இந்த வழக்கு விசாரணையை மாற்ற தலைமை நீதிபதிக்கு, நீதிபதிகள் பரிந்துரை செய்தனர்.