​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
காலில் விழுந்து மன்னிப்பு கோரிய கிராம நிர்வாக அலுவலர்

Published : Jun 20, 2019 6:49 PM

காலில் விழுந்து மன்னிப்பு கோரிய கிராம நிர்வாக அலுவலர்

Jun 20, 2019 6:49 PM

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இறப்பு சான்றிதழ் வழங்க கால தாமதம்  ஏற்பட்டதற்கு, கிராம நிர்வாக அலுவலர் காலில் விழுந்து மன்னிப்பு கோரியுள்ளார்.

நாரணாபுரம் பகுதியை சேர்ந்த சுந்தரேஷ், தனது தந்தையின் இறப்பு சான்றிதழை பெறுவதற்காக பல்லடத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தை அணுகியுள்ளார். ஆனால் ஒரு மாத காலமாக அவருக்கு சான்றிதழ் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த அவர், தனது உறவினர்களுடன் கிராம நிர்வாக அலுவலகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது இடைத்தரகர்கள் மூலமாக மட்டுமே கிராம நிர்வாக அலுவலரை அணுக முடிவதாக அவர் குற்றம்சாட்டினார்.

இதையடுத்து பிரச்னை பெரிதாகிவிடக்கூடாது என அஞ்சிய கிராம நிர்வாக அலுவலர் முத்துலட்சுமி, சான்றிதழ் வழங்க கால தாமதம் ஏற்பட்டதற்கு சுந்தரேஷின் காலில் விழுந்து மன்னிப்பு கோரினார். இதனைத்தொடர்ந்து சுந்தரேஷ் போராட்டத்தை விலக்கிக் கொண்டார்.