​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஸ்டெர்லைட் ஆலை வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

Published : Jun 20, 2019 5:20 PM

ஸ்டெர்லைட் ஆலை வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

Jun 20, 2019 5:20 PM

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்கக் கோரிய வழக்கின் இறுதி விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் வரும் 27-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

ஆலையை மூடி சீல் வைத்த மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உத்தரவை ரத்து செய்யவும், மீண்டும் மின் இணைப்பு, குடிநீர் இணைப்புகளை வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிடவும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள இடைக்காலமாக ஆலையை திறக்க அனுமதிக்கவும் கோரி வேதாந்தா நிறுவனம் வழக்கு தொடந்தது.

ஆலையை பராமரிப்புக்கு திறப்பது தொடர்பாக எந்த விதமான இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்ற நீதிபதிகள், தமிழக அரசு, மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகியோர் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

கடந்த வாரம் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து வைகோ, பேராசிரியர் பாத்திமா உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்களை ஏற்று அவர்களை ஒரு தரப்பு வாதியாக சேர்க்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில் இன்று தமிழக அரசு  மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதையடுத்து தமிழக அரசின் பதில் மனு குறித்து ஸ்டெர்லைட் தரப்பில் பதில் அளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் பிரதான வழக்கில் இறுதி விசாரணை ஜூன் 27 ஆம் தேதி முதல் தொடங்கும் என தெரிவித்தனர்.