​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
முன்னாள் பிரபஞ்ச அழகி மீது பாலியல் அத்துமீறல்

Published : Jun 20, 2019 6:57 AM

முன்னாள் பிரபஞ்ச அழகி மீது பாலியல் அத்துமீறல்

Jun 20, 2019 6:57 AM

முன்னாள் பிரபஞ்ச அழகியான மாடல் மங்கை உஷோசி சென் குப்தாவை நடுரோட்டில் வழிமறித்து கலாட்டா செய்த 7 இளைஞர்களை கொல்கத்தா போலீசார் கைது செய்துள்ளனர்.

இரவு 11.40 மணியளவில் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு ஊபர் வாடகைக் காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார் அவர். அப்போது மாடல் அழகியின் காரை வழிமறித்த பைக் இளைஞர்கள் கார் ஓட்டுனரை அடித்து விரட்டினர்.

பின்னர் அழகி உஷோசி சென் குப்தாவிடம் பாலியல் ரீதியாக அத்துமீறலில் ஈடுபட்டனர்.ஆனால் ரோந்து போலீசார் வந்ததால் இளைஞர்கள் தப்பிச் சென்றனர்.

இந்த காட்சிகள் கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து கொலை வெறியுடன் திரியும் சமூக விரோத சக்திகள் மீதும் துணை போகும் காவல்துறையினர் மீதும் நடவடிக்கை எடுக்க புகார் அளிக்கப்பட்டது.

இதனையடுத்து ஏழு பேரை கைது செய்த காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.