​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நடிகர் சன்னிதியோலுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

Published : Jun 20, 2019 6:26 AM



நடிகர் சன்னிதியோலுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

Jun 20, 2019 6:26 AM

இந்தி நடிகர் தர்மேந்திராவின் மகனும், நடிகருமான சன்னி தியோலுக்கு தேர்தல் செலவுகளை வரம்பு மீறி செய்ததாக தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

குருதாஸ்புர் மாவட்ட தேர்தல் அதிகாரி விபுல் உஜாவல் இது தொடர்பாக சன்னி தியோலுக்கு அனுப்பிய நோட்டீசில், தேர்தல் செலவுக்கு 70 லட்சம் ரூபாய் உச்சவரம்பு விதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

ஆனால் அண்மையில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட சன்னிதியோலின் தேர்தல் செலவுகள் இந்த வரம்பைக் கடந்து விட்டதாக கூறப்படுகிறது.

குர்தாஸ்புரில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சன்னிதியோல் நோட்டீஸ் தொடர்பாக உரிய ஆய்வு செய்து பதிலளிக்கப்படும் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.