​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழக மருத்துவ கல்லூரிகளில் 25 சதவிகித இடத்தை அதிகரிக்க அனுமதி

Published : Jun 19, 2019 5:42 PM



தமிழக மருத்துவ கல்லூரிகளில் 25 சதவிகித இடத்தை அதிகரிக்க அனுமதி

Jun 19, 2019 5:42 PM

மருத்துவ படிப்புகளில் 25 சதவிகித இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

கடந்தாண்டு தமிழகம் முழுவதும் 22 மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 2,900 இடங்கள் இருந்த நிலையில் தற்போது இந்தாண்டு கரூர் மாவட்டத்தில் 150 இடங்களுடன் கூடிய புதிய மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டது.  திருநெல்வேலி மருத்துவ கல்லூரிக்கு கூடுதலாக 100 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், மருத்துவ கல்லூரி சேர்க்கைக்கு 25 சதவிகித இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும்  பொருளாதாரத்தில் நலிந்த முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீட்டை இந்த ஆண்டே அமல்படுத்தவும்  மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.