​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
முழங்கை இல்லா மாணவிக்கு 3டி தொழில்நுட்பம் மூலம் செயற்கை கை

Published : Jun 19, 2019 5:26 PM

முழங்கை இல்லா மாணவிக்கு 3டி தொழில்நுட்பம் மூலம் செயற்கை கை

Jun 19, 2019 5:26 PM

போலந்தில் ஒரு முழங்கை இல்லாத மாணவிக்காக சக மாணவர்கள் செயற்கை முழங்கையை உருவாக்கி உள்ளனர்.

தென்கிழக்கு போலாந்தின் ஜரோஸ்லா ((Jaroslaw)) பகுதியில் இருக்கும் டெக்னிக்கல் பள்ளியில் பயின்று வருபவர் 19 வயதாகும் கிங்கா வாவ்ரோ ((Kinga Wawro)). கார் பிரியையான இவர், பிறக்கும் போதே வலது முழங்கையின்றி பிறந்துள்ளார்.

கார் மெக்கானிக்காகும் ஆசையுடன் இருக்கும் அந்த மாணவிக்கு, அவருடன் பயிலும் சக மாணவர்கள் சேர்ந்து 3டி தொழில்நுட்பம் மூலம் செயற்கை முழங்கையை உருவாக்கி உள்ளனர்.

எடை குறைவான அந்த செயற்கை முழங்கையில், டார்ச் லைட்டும் காந்தங்களும் பொருத்தப்பட்டுள்ளன. இது தனது மகளின் வாழ்க்கையையே மாற்றி உள்ளதாக கிங்காவின் தாய் தெரிவித்துள்ளார்.