​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மோடி பக்கம் அதிர்ஷ்ட காற்று வீசியது; அதனால் தங்கி விட்டேன்: ராம்தாஸ் அத்வாலே

Published : Jun 19, 2019 5:09 PM

மோடி பக்கம் அதிர்ஷ்ட காற்று வீசியது; அதனால் தங்கி விட்டேன்: ராம்தாஸ் அத்வாலே

Jun 19, 2019 5:09 PM

காங்கிரஸ் மீண்டும் கூட்டணிக்கு அழைத்தபோதும், பிரதமர் நரேந்திர மோடி பக்கம், அதிர்ஷ்ட காற்று வீசியதால், அங்கேயே தங்கிவிட்டதாக, மத்திய இணையமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கூறியபோது, பிரதமர் மோடி, ராகுல் காந்தி, சோனியா காந்தி உட்பட அனைவரும் சிரிப்பலையில் மூழ்கினர்.

நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை வாழ்த்தி பேசியபோது, ராம்தாஸ் அத்வாலே இவ்வாறு கூறியுள்ளார். நகைச்சுவை உணர்வோடு, வஞ்சப்புகழ்ச்சி அணிபோல், காங்கிரஸ் தோல்வியையும், மோடியின் வெற்றியையும் பாராட்டிய விதம் கண்டு, பிரதமர் நரேந்திர மோடி, ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்டோர் குலுங்கி சிரித்து மகிழ்ந்தனர்