​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நிதி நிறுவனம் நடத்தி ரூ. 2 கோடி மோசடி

Published : Jun 19, 2019 5:08 PM

நிதி நிறுவனம் நடத்தி ரூ. 2 கோடி மோசடி

Jun 19, 2019 5:08 PM

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் நிதி நிறுவனம் நடத்தி 2 கோடி ரூபாய் மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த முரளி குமார் மற்றும் வேல்பாண்டியன் என்ற இருவர் கடந்த ஆண்டு ஜெயம் ஜுவல்லர்ஸ் மற்றும் ஜெயம் நிதி நிறுவனம் ஆகியவற்றை தொடங்கினர். தங்களது நிறுவனத்தில் முதலீடு செய்தால் குறைந்த விலையில் தங்கம், குறைந்த வட்டிக்கு கடன் உள்ளிட்ட திட்டங்களை அவர்கள் அறிவித்தனர்.

இதனை நம்பி அந்தியூரைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் இரண்டு கோடி ரூபாய்க்கும் மேல் முதலீடு செய்தனர். ஆனால் சில மாதங்களிலேயே அவர்கள் நிறுவனத்தை மூடிவிட்டு தலைமறைவானபோதுதான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மக்கள் ஈரோடு மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினரிடம் புகார் அளித்தனர்.

இருவரையும் தேடி வந்த போலீசார் முரளிகுமாரை அந்தியூர் பேருந்து நிலையத்தில் மடக்கிப் பிடித்தனர். தலைமறைவாக உள்ள வேல்பாண்டியனை தேடிவருகின்றனர்.