​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நாடாளுமன்ற நடைமுறையில் இதுவரை இல்லாத ஒன்று - வைகோ

Published : Jun 19, 2019 4:30 PM



நாடாளுமன்ற நடைமுறையில் இதுவரை இல்லாத ஒன்று - வைகோ

Jun 19, 2019 4:30 PM

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு எதிரான தேசத் துரோக வழக்கில் ஜூலை ஐந்தாம் தேதி தீர்ப்பு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை ராணி சீதை மன்றத்தில் 2009ஆம் ஆண்டு நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய வைகோ, விடுதலைப்  புலிகளுக்கு ஆதரவாகவும், இந்திய அரசுக்கு எதிராகவும் பேசியதாக ஆயிரம் விளக்கு போலீசார், தேச துரோக வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கானது சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அரசு மற்றும் வைகோ தரப்பு விசாரணையும் குறுக்கு விசாரணையும் நிறைவடைந்து விட்ட நிலையில், ஜூலை ஐந்தாம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்றும் சாந்தி தெரிவித்தார்.

இதனிடையே விசாரணைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, தமிழக எம்.பி.க்கள், தமிழ் வாழ்க என்று முழக்கமிட்டது, நாடாளுமன்ற நடைமுறைகளில் இதுவரை இல்லாத ஒன்று என தெரிவித்தார்.