​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
Tiktok யில் பதிவேற்றுவதற்காக சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர் படுகாயம்

Published : Jun 19, 2019 4:28 PM

Tiktok யில் பதிவேற்றுவதற்காக சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர் படுகாயம்

Jun 19, 2019 4:28 PM

கர்நாடக மாநிலத்தில் டிக்டாக் செயலியில் பதிவேற்றுவதற்காக பின் புறமாக கரணம் அடித்து சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர் கழுத்திலும், முதுகெலும்பிலும் படுகாயம் அடைந்தார்.

தும்கூரூ ((Tumakuru)) மாவட்டம் கொடேகெரே ((Godekere)) கிராமத்தைச் சேர்ந்தவர் குமார். பாடகர் மற்றும் நடனக் கலைஞரான இவர் சாகசங்களை செய்து டிக்டாக் செயலியில் பதிவேற்றி நண்பர்களிடம் பாராட்டை பெறுவதும் வழக்கம்.

அண்மையில் பின்புறமாக கரணம் அடிக்கும் சாகசத்தை மேற்கொண்ட அவர், துரதிர்ஷடமாக நிலை தடுமாறி விழுந்தார். கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அவரது கழுத்து மற்றும் முதுகெலும்பை சீரமைக்க மருத்துவர்கள் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைத்துள்ளனர்.

ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த குமாரின் குடும்பத்தில் அவர் மட்டுமே சம்பாதிக்கும் உறுப்பினர் என்ற நிலையில் மற்றவர்கள் தன்னைப் போல செயலிக்காக சாகசங்கள் செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.