​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அரசு மருத்துவமனையில் பணிபுரிய 8 திருநங்கைகளுக்கு பணி நியமன ஆணை

Published : Jun 19, 2019 3:45 PM

அரசு மருத்துவமனையில் பணிபுரிய 8 திருநங்கைகளுக்கு பணி நியமன ஆணை

Jun 19, 2019 3:45 PM

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரிய திருநங்கைகளுக்கு பணி நியமன ஆணையை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கினார்.

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 24 மணி நேரமும் இயங்கும் மகப்பேறு மருத்துவ பிரிவில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் முதன்முறையாக 8 திருநங்கைகள் காவலர் பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கான பணி நியமன ஆணையை சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமை செயலகத்தில் வழங்கினார். மேலும் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில், புதிதாக புற்றுநோய் வலி நிவாரணம் மற்றும் ஆதரவு மையத்தை அமைச்சர் விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசு மருத்துவமனைகளில் குடிநீர் பிரச்னையை தீர்க்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படுவதால் தட்டுப்பாடு இல்லை என்றார்.