​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மக்களவையில் தமிழ் வாழ்க என முழங்கிய எம்.பி.க்களுக்கு பாராட்டு

Published : Jun 19, 2019 3:44 PM

மக்களவையில் தமிழ் வாழ்க என முழங்கிய எம்.பி.க்களுக்கு பாராட்டு

Jun 19, 2019 3:44 PM

தமிழக எம்.பி.க்கள் தமிழ் வாழ்க என்று மக்களவையில் முழக்கமிட்டதற்கு, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பாராட்டு தெரிவித்துள்ளார்.

இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக வைகோ மீது பதிவு செய்யப்பட்ட தேச துரோக வழக்கானது சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வழக்கின் விசாரணைக்கு ஆஜரான வைகோ ,பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், தமிழக எம்.பி.க்கள், தமிழ் வாழ்க என்று முழக்கமிட்டது, நாடாளுமன்ற நடைமுறைகளில் இதுவரை இல்லாத ஒன்று என தெரிவித்தார். பாஜக உறுப்பினர்களின் செயலுக்கு எதிர்வினையாற்றும் விதமாக தமிழக எம்.பி.க்கள் இவ்வாறு செய்ததாகவும் வைகோ கூறினார்.