​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இந்தி மட்டுமே இந்தியாவின் ஆட்சி மொழியா?

Published : Jun 19, 2019 12:42 PM



இந்தி மட்டுமே இந்தியாவின் ஆட்சி மொழியா?

Jun 19, 2019 12:42 PM

தமிழக அரசின் ஏழாம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் இந்தி மட்டுமே ஆட்சிமொழி என குறிப்பிடப்பட்டு இருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.image

நாட்டில் 22 மொழிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன் தேசிய மொழியோ ஆட்சி மொழி என்றோ எதுவும் குறிப்பிடப்படாத நிலையில் சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் 210 ஆவது பக்கத்தில் இந்திமொழி மட்டுமே இந்தியாவின் ஆட்சி மொழி என குறிப்பிடப்பட்டு இருப்பதாக கூறி வரலாற்று ஆசிரியர்கள் அதிருப்தி தெரிவித்து உள்ளனர்.

இது வளரும் இளைய தலைமுறையினரிடையே தவறான கண்ணோட்டத்தை உருவாக்கி விடும் என்பதால் உடனடியாக திருத்தம் செய்யவேண்டும் என பள்ளிக்கல்வித்துறைக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர். ஏற்கனவே பாடப்புத்தகத்தில் பாரதியார் தலைப்பாகை காவி நிறத்தில் இருப்பதாக புகார் எழுந்த நிலையில் புதிதாக இந்தி ஆட்சி மொழி என குறிப்பிடப்பட்டு இருப்பதும் சர்ச்சைக்குள்ளாகி உள்ளது.