​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
விவசாய நிலத்தை சமன்படுத்தும் பணியின்போது ஐம்பொன் சிலைகள் கண்டுபிடிப்பு

Published : Jun 18, 2019 5:07 PM

விவசாய நிலத்தை சமன்படுத்தும் பணியின்போது ஐம்பொன் சிலைகள் கண்டுபிடிப்பு

Jun 18, 2019 5:07 PM

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே விவசாயி ஒருவரின் நிலத்தை சமன் செய்யும் பணியின்போது 17 ஐம்பொன் சிலைகளும் சிலை பீடம் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

பேரையூரைச் சேர்ந்த முத்தையா என்பவருக்குச் சொந்தமான நிலத்தை சமன் செய்யும் பணிகள் ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் நடைபெற்று வந்தன. அப்போது அங்கிருந்த மரம் ஒன்றை அப்புறப்படுத்த முயன்றபோது அதன் வேர் பகுதியில் 2 சிலைகள் கிடந்துள்ளன.

உடனடியாக அவர்கள் வருவாய்த்துறைக்கும் தொல்பொருள் துறையினருக்கும் தகவல் கொடுத்துள்ளனர். விரைந்து வந்த அதிகாரிகள், 2 சிலைகளையும் மீட்டு, சுற்றியுள்ள மற்ற இடங்களையும் ஜேசிபி எந்திரத்தின் உதவியுடன் தோண்டிப்பார்த்துள்ளனர்.

அவ்வாறு தோண்டத் தோண்ட அடுத்தடுத்து சிலைகள் கிடைத்துள்ளன. இதுவரை 17 ஐம்பொன் சிலைகளும், சிலை பீடம் ஒன்றும் கிடைத்துள்ள நிலையில், தேடுதல் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.