​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மழைநீர் சேமிப்பு திட்டத்தை தீவிர இயக்கமாக்க வேண்டும்

Published : Jun 17, 2019 7:12 PM



மழைநீர் சேமிப்பு திட்டத்தை தீவிர இயக்கமாக்க வேண்டும்

Jun 17, 2019 7:12 PM

நிலத்தடி நீர்வளம் பெருக்க மழைநீர் சேமிப்பு திட்டத்தை தீவிர இயக்கமாக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி இருக்கிறார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், இயற்கை கொடையாக கொடுத்த தண்ணீர் வளத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ளாதது நமது தவறுதான் என்று குறிப்பிட்டுள்ளார்.

சென்னை போன்ற கான்க்ரீட் காடுகளில் அதிகபட்சமாக 5 சதவீத தண்ணீர் கூட பூமியால் உறிஞ்சப்படுவது இல்லை என்றும், 95 சதவீத நீர் வீணாக கடலில் கலப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வீடுகளில் மட்டுமின்றி பொது இடங்களிலும் மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகளை உருவாக்க வேண்டியது கட்டாயத் தேவையாகும் என்று கூறியுள்ளார்.

மத்திய அரசின் ஒத்துழைப்புடன் மழைநீர் சேமிப்பை தீவிர இயக்கமாக நடத்த தமிழக அரசு முன்வர வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தி இருக்கிறார்.