​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சிக்னல் கோளாறு காரணமாக மின்சார ரயில் சேவை பாதிப்பு

Published : Jun 17, 2019 2:12 PM

சிக்னல் கோளாறு காரணமாக மின்சார ரயில் சேவை பாதிப்பு

Jun 17, 2019 2:12 PM

காஞ்சிபுரம் மாவட்டம் பரனூர் பகுதியில் ஏற்பட்ட சிக்னல் கோளாறு காரணமாக, சென்னை கடற்கரை மற்றும் செங்கல்பட்டு இடையேயான மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டது.

ரயில்கள் நிறுத்தப்பட்டதால் அவ்வழித்தடத்தில் பயணிக்கக்கூடிய மின்சார ரயில்கள் சுமார் ஒரு மணி நேரம் தாமதமாகவே பயணித்தன. தாமதத்தை தொடர்ந்து ஏராளமான பயணிகள் ரயில் நிலையத்திலேயே காத்திருந்தனர். குறிப்பிட்ட நேரத்தில் பயணத்தை மேற்கொள்ள முடியாமல் பயணிகள் கடும் அவதிக்கும் ஆளாகினர்.