​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நேற்றைய கிரிக்கெட் போட்டியை சர்ஜிகல் தாக்குதலோடு ஒப்பிட்டு அமித்ஷா வாழ்த்து

Published : Jun 17, 2019 9:23 AM



நேற்றைய கிரிக்கெட் போட்டியை சர்ஜிகல் தாக்குதலோடு ஒப்பிட்டு அமித்ஷா வாழ்த்து

Jun 17, 2019 9:23 AM

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை இந்திய அணி வீழ்த்தி இருப்பதை சர்ஜிகல் தாக்குதலோடு ஒப்பிட்டு உள்துறை அமைச்சர் அமித் ஷா பாராட்டியுள்ளார்.

உலகக்கோப்பைத் தொடரில் பாகிஸ்தானும் இந்தியாவும் நேற்று மோதின. இதில் இந்திய அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமித் ஷா, பாகிஸ்தான் மீது இந்திய அணி மற்றொரு தாக்குதல் நடத்தி இருப்பதாகக் கூறியுள்ளார்.

அற்புதமாக செயல்பட்ட ஒட்டுமொத்த இந்திய அணிக்கும் வாழ்த்துகள் என்றும் அமித் ஷா குறிப்பிட்டுள்ளார்.

இந்த வெற்றியால் ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்படுவதாகவும், கொண்டாடுவதாகவும் அவர் பதிவிட்டுள்ளார்.