​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
குடிநீர் தட்டுப்பாடு குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

Published : Jun 17, 2019 8:34 AM



குடிநீர் தட்டுப்பாடு குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

Jun 17, 2019 8:34 AM

தமிழகத்தில் நிலவும் குடிநீர் தட்டுபாடு குறித்து, அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அவசர ஆலோசனை நடத்துகிறார். 

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வறட்சி காரணமாக குடிநீர் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக பல்வேறு ஆலோசனைக் கூட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஏற்கனவே நடத்தியுள்ளார்.

இந்நிலையில், குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது குறித்து ஆய்வு செய்யவும், மேற்கொள்ள வேண்டிய உடனடி நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்யவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில் உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி, வருவாய்த் துறை அமைச்சர் உதயகுமார் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொள்கின்றனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், வரும் காலங்களில் இதுபோன்ற நிலை ஏற்படாமல் தடுக்கும் நடவடிக்கைகள் குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.