​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
காதலித்து விட்டு திருமணத்திற்கு மறுத்த காதலன் மீது ஆசிட் வீச்சு

Published : Jun 17, 2019 7:29 AM



காதலித்து விட்டு திருமணத்திற்கு மறுத்த காதலன் மீது ஆசிட் வீச்சு

Jun 17, 2019 7:29 AM

காதலித்துவிட்டு திருமணம் செய்ய மறுத்த காதலன் மீது இளம்பெண் ஆசிட் வீசிய சம்பவம் டெல்லியில் அரங்கேறி உள்ளது.

விகாஸ்பூரி என்ற இடத்தில் மருத்துவமனை ஒன்றில் இளம்பெண் ஒருவரும், இளைஞரும் காயங்களுடன் சிகிச்சை பெற வந்திருந்தனர்.

இதுபற்றி தகவலறிந்த போலீசார் அந்தப் பெண்ணிடம் நடத்திய விசாரணையில் இருவரும் காதலர்கள் என்பது தெரியவந்தது.  காதலித்து விட்டு திருமணம் செய்ய மறுத்ததால் ஆத்திரமடைந்த அந்தப் பெண் காதலன் மீது ஆசிட் வீசியதும் போலீசார் நடத்திய விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. ஆசிட் வீச்சில் அந்த இளைஞனுக்கு முகம், கழுத்து மற்றும் மார்புப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.

மேலும் அந்தப் பெண்ணுக்கும் கைகளில் காயம் இருந்தது. இதையடுத்து அந்தப் பெண்ணைக் கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.