​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கார் கவிழ்ந்த விபத்தில் ஒருவர் பலி

Published : Jun 17, 2019 7:23 AM

கார் கவிழ்ந்த விபத்தில் ஒருவர் பலி

Jun 17, 2019 7:23 AM

காஞ்சிபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார் கவிழ்ந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். காரிலிருந்து 69 லட்சம் ரூபாயை மீட்ட ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அதனை காவல் துறையிடம் ஒப்படைத்தனர். 

சென்னை மாதவரம் பகுதியில் இரும்பு வியாபாரம் செய்து வரும் செட்டியார் என்பவர் தனது ஊழியர்களை நிலுவைத் தொகையை வசூல் செய்து வரும்படி வேலூருக்கு  அனுப்பி வைத்தார்.

வசூலான 69 லட்சம் ரூபாயுடன் அவர்கள் சென்னை நோக்கி காரில் வந்து கொண்டிருந்தனர். காஞ்சிபுரம் அடுத்த தேசிய நெடுஞ்சாலையில் சின்னையன் சத்திரம் என்ற இடத்தில் காரின் டயர் வெடித்ததில் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்த முரளி என்பவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

படுகாயமடைந்த இருவர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இதை கண்ட அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் அங்கு வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் விஜயகுமார் மற்றும் ஓட்டுநர் சந்தானம் படுகாயமடைந்த இருவருக்கும் சிகிச்சை அளித்து காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

காரில் சிதறிக்கிடந்த பணக்கட்டுகளை எடுத்துக்கொண்டு அவர்கள்  காஞ்சிபுரம் தாலுகா போலீசாரிடம் அதனை ஒப்படைத்தனர். 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களின் நேர்மையை காவல்துறையினரும் மருத்துவ நிர்வாகத்தினரும் அவர்களை வெகுவாக பாராட்டினர்.