​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பாகிஸ்தான் படையினர் தாக்குதல் - 3 பேர் காயம்

Published : Jun 17, 2019 7:21 AM

பாகிஸ்தான் படையினர் தாக்குதல் - 3 பேர் காயம்

Jun 17, 2019 7:21 AM

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 11 வயது குழந்தை உள்பட மூவர் காயமடைந்தனர்.

பூஞ்ச் பகுதியில்  எல்லைக்கு அப்பால் இருந்து பாகிஸ்தான் படையினர் குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் 11 வயது சிறுமி உள்பட 3 பேர் பலத்த காயமடைந்தனர்.

இதையடுத்து குறிப்பிட்ட பகுதிக்கு எல்லைப் பாதுகாப்புப் படையினர் விரைந்துள்ளனர். பாகிஸ்தான் தரப்பில் இருந்து தொடர்ந்து குண்டுகள் வீசப்பட்டதைத் தொடர்ந்து இந்தியப் படையினரும் எதிர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.