​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் ரூ.1400 கோடி இழப்பு - அனில் அகர்வால்

Published : Jun 16, 2019 5:57 PM

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் ரூ.1400 கோடி இழப்பு - அனில் அகர்வால்

Jun 16, 2019 5:57 PM

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை கடந்த ஓராண்டாக மூடப்பட்டிருப்பதால் சுமார் 1400 கோடி ரூபாய் அளவுக்கு லாபத்தில் இழப்பு ஏற்பட்டுள்ளதாக வேதாந்தா குழும தலைவர் அனில் அகர்வால் கூறியுள்ளார்.

காப்பர் தயாரிக்கும் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால், வெளிநாட்டில் இருந்து காப்பர் இறக்குமதி செய்யப்படும் நிலை ஏற்பட்டு இருப்பதாகவும், அதனால் மதிப்பு மிக்க அன்னிய செலாவணி செலவிடப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நாம் உற்பத்தியாளர்களாக இருப்பதற்குப் பதில், இறக்குமதியாளர்களாக இருக்கவே உலகம் விரும்புகிறது என்று கூறிய அவர், துப்பாக்கிச்சூடு சம்பவத்தைப் போன்று ஆலையை மூடப்பட்டிருப்பதும் துரதிர்ஷ்டவசமானது என்றார்.

ஸ்டெர்லைட் ஆலை பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்றும் அனில் அகர்வால் நம்பிக்கை தெரிவித்தார்.