​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
விவசாயிகள் கடனை அடைக்க, தனது சொத்துக்களை எழுதி தர தயார்

Published : Jun 16, 2019 5:56 PM

விவசாயிகள் கடனை அடைக்க, தனது சொத்துக்களை எழுதி தர தயார்

Jun 16, 2019 5:56 PM

விவசாயிகளின் கடனை அடைப்பதற்கு  தனது சொத்துக்களை எழுதித் தர தயார் என பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம், முட்டைக்காட்டில், தேர்தலில் உழைத்த கூட்டணி கட்சி மற்றும் கட்சி தொண்டர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் பங்கேற்ற முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது 

அண்ணன் திருநாவுக்கரசு தெரிவித்தது போல், தனது சொத்துக்களை விவசாயிகள் கடன் அடைப்பதற்கு எழுதி தர தயாராக இருப்பதாக குறிப்பிட்ட அவர், அண்ணன் திருநாவுக்கரசு உட்பட புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 37 நாடாளுமன்ற உறுப்பினர்களும் எழுதி தர தயாராக உள்ளார்களா என கேள்வி எழுப்பினார். மேலும் கன்னியாகுமரியில் துறைமுகம் வந்தே தீரும் எனவும் கூறினார்.