​​ நலிந்த கலைஞர்களுக்கு நடிகர் சங்கத்தின் சார்பில் நிதியுதவி
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நலிந்த கலைஞர்களுக்கு நடிகர் சங்கத்தின் சார்பில் நிதியுதவி


நலிந்த கலைஞர்களுக்கு நடிகர் சங்கத்தின் சார்பில் நிதியுதவி

Feb 14, 2018 6:56 PM

நலிந்த கலைஞர்களுக்கு நடிகர் சங்கத்தின் சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டது.

பல்வேறு திரைப்படங்களில் பாட்டியாக நடித்து புகழ் பெற்றவர் ரங்கம்மாள் பாட்டி. இவர் திரைப்படங்களில் நடிப்பதன் மூலம் கிடைக்கும் 500 ரூபாயை கொண்டு குடும்பத்தை நடத்திவந்தார். அண்மையில் அவர் மெரீனா கடற்கரையில் பிச்சை எடுப்பதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் அவர் பிச்சை எடுக்கவில்லை என்றும் நடிப்பதால் கிடைக்கும் 500 ரூபாய் வருமானம் போதாததால் மெரீனா கடற்கரையில் சிறியவகை எலக்ட்ரானிக் பொருட்களை விற்பதாகத் தெரியவந்ததாகவும், அவருக்கு 5 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டதாகவும் தென்னிந்திய நடிகர் சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போன்று நலிந்த கலைஞரான பிந்துகோஷுக்கும் 5 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.