​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ்.இன் சகோதரர் மீது வழக்குப்பதிவு

Published : Jun 16, 2019 2:23 PM

துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ்.இன் சகோதரர் மீது வழக்குப்பதிவு

Jun 16, 2019 2:23 PM

தாக்குதல் மற்றும் மிரட்டல் வழக்கில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா மீது வழக்குப்பதிவு செய்ய பெரியகுளம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் நகர செயலராக இருந்த பெரியகுளத்தைச் சேர்ந்த துரை என்பவர், கடந்த ஆண்டு அக்டோபர் 21ஆம் தேதி மர்மநபர்களால் தாக்கப்பட்டார். தாக்குதலில் ஈடுபட்ட கும்பல், ஓ.ராஜாவின் ஆதரவாளர்கள் என்று குற்றம்சாட்டப்பட்டது.

மணல் கொள்ளை தொடர்பாக புகார் அளித்த காரணத்தால் தான் துரை தாக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. இதுதொடர்பாக பெரியகுளம் வடகரை போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் அதை போலீசார் கிடப்பில் போட்டு விட்டதாகவும் சொல்லப்பட்டது. இதைத் தொடர்ந்து ரேசன் பொருட்கள் கொள்ளை தொடர்பாகவும் துரை புகார் அளித்ததாகவும், இதைக் கேள்விப்பட்ட ஓ.ராஜா, துரையை செல்போனில் தொடர்பு கொண்டு மிரட்டியதாகவும் ஆடியோ ஒன்று வெளியாகி இருந்தது.

இதைத் தொடர்ந்து ஓ.ராஜா உள்ளிட்டோர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி பெரியகுளம் நீதிமன்றத்தை துரை நாடினார். இதை கடந்த 4ஆம் தேதி விசாரித்த நீதித்துறை நடுவர், ஓ. ராஜா உள்ளிட்ட மூன்று பேர் மீது பெரியகுளம் வடகரை போலீசார் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டார். 2 மாதங்களுக்குள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.