​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திருமாவளவன் மீது 2 பிரிவுகளில் போலீசார் வழக்கு

Published : Jun 16, 2019 2:16 PM



திருமாவளவன் மீது 2 பிரிவுகளில் போலீசார் வழக்கு

Jun 16, 2019 2:16 PM

மகாத்மா காந்தி குறித்து சர்ச்சைக்குரியவகையில் பேசியதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் 18-ஆம் தேதி அசோக் நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைமை அலுவலகத்தில் முள்ளிவாய்க்கால் 10-ஆம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்போது பேசிய திருமாவளவன் காந்தி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக இந்து மக்கள் முன்னணி சார்பில் அசோக் நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

அதன் பேரில் திருமாவளவன் மீது இரண்டு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் கருத்துத் தெரிவித்தல் உள்ளிட்ட இரு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.