​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
எவரெஸ்ட் சிகரத்தில் 17,600 அடி உயரத்தில் யோகா நிகழ்ச்சி

Published : Jun 16, 2019 2:15 PM

எவரெஸ்ட் சிகரத்தில் 17,600 அடி உயரத்தில் யோகா நிகழ்ச்சி

Jun 16, 2019 2:15 PM

சர்வதேச யோகா தினத்தையொட்டி, எவெரெஸ்ட் சிகரத்தின் 17,600 அடி உயரத்தில் யோகா நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

பிரதமர் மோடியின் கோரிக்கையை ஏற்று ஜூன் 21ஆம் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐ.நா.சபை அறிவித்தது. இந்நிலையில், 5வது ஆண்டு யோகா தினத்தை முன்னிட்டு, பல்வேறு நாடுகளில் யோகா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், நேபாள தலைநகர் காத்மாண்டுவில் உள்ள இந்திய தூதரகம் சார்பில், எவரெஸ்ட் சிகரத்தில் யோகா செய்யும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எவரெஸ்ட் சிகரத்தின் 17,600 அடி உயரத்தில், பனிகட்டிகள் உறைந்த பகுதியில் கடும் குளிரில் மலையேற்ற வீரர்கள் யோகா செய்தனர். இதேபோல், நேபாளத்தில் உள்ள சியான்போக் பகுதியில் நடந்த யோகா நிகழ்ச்சியிலும் பலர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.