​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
புதிய தீவிரவாதக் கண்காணிப்புக் குழுவை அமைத்தது மத்திய உள்துறை

Published : Jun 15, 2019 8:14 PM

புதிய தீவிரவாதக் கண்காணிப்புக் குழுவை அமைத்தது மத்திய உள்துறை

Jun 15, 2019 8:14 PM

புதிய தீவிரவாதக் கண்காணிப்புக் குழுவை மத்திய உள்துறை அமைச்சகம் அமைத்துள்ளது.

உள்துறை அமைச்சராக அமித்ஷா பொறுப்பேற்ற பின் ஜம்மு காஷ்மீரில் உள்ள சூழ்நிலை குறித்து, ஆளுநர் சத்யபால் மாலிக்குடன் நேரில் ஆலோசனை நடத்தினார்.

இதைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதக் குழுக்களுக்கு நிதி அளிப்பவர்களை ஒடுக்கும் பொருட்டு, மத்திய அரசின் பல துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளை உறுப்பினர்களாக்கி புதிய தீவிரவாதக் கண்காணிப்புக் குழுவை மத்திய உள்துறை அமைச்சகம் அமைத்துள்ளது. அக்குழுவுக்கு ஜம்மு காஷ்மீர் சிஐடி பிரிவு டிஜிபி தலைமை வகிப்பார்.

புலனாய்வுத்துறை, தேசிய புலனாய்வு முகமை, மத்திய புலனாய்வு வாரியம், மறைமுக வரிகள் மற்றும் சுங்கத்துறை வாரியம், மத்திய நேரடி வரிகள் வாரியம், அமலாக்கத்துறை ஆகிய துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் இதில் உறுப்பினர்களாக செயல்படுவர்.