​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அம்பு எய்யும் முறையில் 10ம் வகுப்பு மாணவர் அபார சாதனை

Published : Jun 15, 2019 4:19 PM



அம்பு எய்யும் முறையில் 10ம் வகுப்பு மாணவர் அபார சாதனை

Jun 15, 2019 4:19 PM

விருதுநகரில் பத்தாம் வகுப்பு மாணவர் ஒருவர் வில்வித்தை விளையாட்டில் சாதனை படைத்துள்ளார்.

அங்கு செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் ஷியாம் கணேஷ் என்ற மாணவர், பத்தாம் வகுப்பு பயின்று வருகிறார். சிறு வயது முதலே வில்வித்தை விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்ட இவர், கையை தரையில் ஊன்றி தலைகீழாக நின்றபடி, காலால் வில்லை எய்யும் வகையில் பயிற்சி பெற்றுள்ளார்.

அதன் படி சுமார் 14 மீட்டர் தொலைவில் உள்ள இலக்கின் மீது துல்லியமாக அம்பு எய்து சாதனையும் படைத்துள்ளார்.

ஒன்றரை நிமிடத்தில் மூன்று முறை இலக்கை சரியாக எட்டியதன் மூலம், மாணவர் ஷியாம் கணேஷின் சாதனை, நோபல் புக் ஆப் வேல்டு ரெகார்ட்ஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.