​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அமெரிக்காவில் குட்டி விமானம் மூலம் உணவுகள் சப்ளை

Published : Jun 15, 2019 10:09 AM

அமெரிக்காவில் குட்டி விமானம் மூலம் உணவுகள் சப்ளை

Jun 15, 2019 10:09 AM

செயலி மூலம் இயங்கும் பிரபல உபேர் ஈட்ஸ் உணவு நிறுவனம், குட்டி விமானம் மூலம் வாடிக்கையாளர்களுக்கு சுட சுட உணவு டெலிவரி செய்ய திட்டமிட்டுள்ளது.

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் உபேர் ஈட்ஸ் நிறுவனம், வாடிக்கையாளர்கள்  ஆர்டர் செய்யும் உணவுகளை டெலிவரி பாய்ஸ் மூலம் சப்ளை செய்து வருகிறது. இருப்பினும் வாடிக்கையாளர்களின் காத்திருப்பு நேரத்தை தவிர்க்க, நிறுவனம் புதிய முயற்சியை கையாண்டுள்ளது. அதன்படி குட்டி விமானம் மூலம்  உணவுகளை எடுத்து சென்று, குறிப்பிட்ட இடத்தில்  காத்திருக்கும் உணவு நிறுவன ஊழியர்களிடம் வழங்கவும், அவர்கள் வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கே சென்று விநியோகிக்கவும் உள்ளனர்.

அமெரிக்காவின் சான்டியாகோ நகரத்தில்  மெக்டொனால்ட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நடத்திய இந்த சோதனை முயற்சி வெற்றிப்பெற்றதை தொடர்ந்து, அந்த சேவையை அறிமுகம் செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளது.