​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மேற்கு வங்கத்தில் மருத்துவர்கள் வேலை நிறுத்தம் விஸ்வரூபம்

Published : Jun 15, 2019 7:30 AM

மேற்கு வங்கத்தில் மருத்துவர்கள் வேலை நிறுத்தம் விஸ்வரூபம்

Jun 15, 2019 7:30 AM

மேற்கு வங்கத்தில் மருத்துவர்கள் வேலை நிறுத்தம் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில் போராட்டத்திற்கு தீர்வு காண முதலமைச்சர் மம்தா பானர்ஜியை ஆலோசனை நடத்த வருமாறு ஆளுநர் கேசர்நாத் திரிபாதி அழைப்பு விடுத்துள்ளார்.

மருத்துவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை நிறுத்த வலியுறுத்தி அங்குள்ள மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். நேர்மையாக கடுமையாக உழைக்கும் தங்கள் மீது நடைபெறும் வன்முறைத் தாக்குதல்களை நிறுத்தக் கோரி 450க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் தங்கள் ராஜினாமா கடிதங்களை அரசுக்கு கொடுத்துள்ளனர்.

மேலும் 642 மருத்துவர்களும் , மருத்துவக் கல்லூரிகளின்  பேராசிரியர்களும் ராஜினாமா செய்ய உள்ளதாக தங்கள் மேலதிகாரிகளுக்குத் தெரிவித்துள்ளனர் . இதனால் மருத்துவ சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மருத்துவத் துறையை கவனிக்கும் சுகாதார அமைச்சகத்தை தம் வசம் வைத்திருக்கும் மம்தா பானர்ஜி பேச்சுவார்த்தைக்கு அழைத்தும் வரவில்லை என்று ஆளுநர் திரிபாதி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.