​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
14,000 விவசாயிகளின் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுப்பு

Published : Jun 14, 2019 1:08 PM

14,000 விவசாயிகளின் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுப்பு

Jun 14, 2019 1:08 PM

கர்நாடக மாநிலத்தில் 14 ஆயிரம் விவசாயிகளிடம் இருந்து அம்மாநில அரசு தள்ளுபடி செய்த கடன் தொகை மக்களவைத் தேர்தல் முடிந்த பின்பு  விவசாயிகளின் கணக்கில் இருந்து திரும்பப் பெறப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

மக்களவைத் தேர்தலுக்கு முன் கடந்த ஏப்ரல் மாதம் விவசாயிகளின் சுமார் 6500 கோடி ரூபாய் அளவிலான கடன்களை கர்நாடக அரசு தள்ளுபடி செய்தது. இந்த நிலையில் கடந்த 3-ஆம் தேதி 13 ஆயிரத்து 988 விவசாயிகளின் கணக்கில் இருந்து பணம் டெபிட் ஆகியுள்ளது. இது குறித்து விசாரித்த போது வங்கிகள் தாங்களாகவே விவசாயிகளின் கணக்கில் இருந்து பணத்தை திரும்ப எடுத்துள்ளது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் தேர்தலுக்கு முன்பாக விவசாய கடன் தள்ளுபடி என நிதி வழங்கிய குமாரசாமி அரசு தேர்தல் முடிந்த பிறகு அந்த பணத்தை திரும்ப எடுத்துக் கொண்டதாக குற்றஞ்சாட்டினர். ஆனால் கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளே விவசாயிகளின் கணக்கில் இருந்து பணத்தை திரும்பப் பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் இதுதொடர்பாக பேச வங்கிகளின் பிரதிநிதிகளை தான் வரும் 14-ஆம் தேதி அழைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் 7 லட்சத்து 50 ஆயிரம் விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடிக்காக 3 ஆயிரத்து 930 கோடி ரூபாயை கர்நாடக அரசு ஒதுக்கியதாகவும் தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு அந்த தொகை பிரித்து கடன் தள்ளுபடி செய்யப்ப்டடதாகவும் வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் அதன் பிறகு நடைபெற்ற ஆய்வில் தகுதியற்றவர்கள் பெற்ற விவசாய கடன் தள்ளுபடி தொகையான சுமார் 60 கோடி ரூபாயை திரும்ப பெற்றதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.