​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மார்க்சிஸ்ட் கம்யூ. - இந்திய கம்யூ. கட்சிகளை இணைக்க பேச்சுவார்த்தை

Published : Jun 14, 2019 6:36 AM

மார்க்சிஸ்ட் கம்யூ. - இந்திய கம்யூ. கட்சிகளை இணைக்க பேச்சுவார்த்தை

Jun 14, 2019 6:36 AM

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் ஒரே இயக்கமாக செயல்பட மீண்டும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

கடந்த மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பின்னர் மார்க்சிஸ்ட் கட்சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று அதன் பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி மார்க்சிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரிக்கு கடிதம் எழுதினார். இருவரும் இது தொடர்பாக நேரிலும் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

1964ம் ஆண்டில் ஒன்றாக இருந்த கம்யூனிஸ்ட்டுகள் இரண்டாக பிளவுபட்டதற்கான காரணங்கள் இப்போது மதிப்பிழந்து விட்டதாகவும் ,பல ஆண்டுகளாக கொள்கையளவில் இரு அணிகளிலும் வித்தியாசம் ஏதுமில்லை என்றும் அக்கடிதத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக இரு கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்களிடமும் கருத்து கேட்கப்பட்டு வருகிறது.