​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
5ம் கட்ட பணிகளை 5 மாதங்களில் முடிக்க திட்டம் - பாண்டியராஜன்

Published : Jun 13, 2019 4:56 PM

5ம் கட்ட பணிகளை 5 மாதங்களில் முடிக்க திட்டம் - பாண்டியராஜன்

Jun 13, 2019 4:56 PM

பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் கீழடி போன்ற இடங்களை வரலாற்று சுற்றுலாதலமாக அமைக்க ஏற்பாடு செய்யவுள்ளதாக, அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டம் கீழடியில் 5ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு சார்பில் 47 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக 15இடங்களில் தோண்டப்பட்டு அகழ்வாராய்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இந்த 5ம் கட்ட பணியை அமைச்சர் பாண்டியராஜன் துவக்கிவைத்தார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.ஃபா.பாண்டியராஜன், 5ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகளை 5 மாதங்களில் முடிக்க திட்டமிட்டுள்ளதாக கூறினார்.