​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை கூண்டில் சிக்கியது

Published : Jun 13, 2019 2:45 PM

பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை கூண்டில் சிக்கியது

Jun 13, 2019 2:45 PM

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கி பிடிபட்டது.

மோத்தேபாளையம் கிராம மலையடிவார பகுதிகளில் சிறுத்தை ஒன்று நுழைந்து ஆடு, மாடு மற்றும் வளர்ப்பு நாய்களை வேட்டையாடி வந்ததால் விவசாய நிலங்களுக்கு செல்ல அச்சமடைந்த பொதுமக்கள் சிறுத்தையை பிடிக்க வனத்துறைக்கு கோரிக்கை விடுத்தனர்.

அதன்பேரில் கடந்த மாதம் வனத்துறையினர் கேமராக்கள் பொருத்தி கண்காணித்ததில் சிறுத்தை இருப்பது உறுதி செய்து சத்தியமங்கலத்தில் இருந்து கூண்டு கொண்டு வரப்பட்டு சிறுத்தை நடமாட்டம் காணப்பட்ட சென்னாமலை அடிவாரத்தில் வைத்தனர். இன்று காலை கூண்டில் சிறுத்தை சிக்கியிருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் சிறுத்தையை பாதுகாப்பாக டெம்போ வாகனத்தில் ஏற்றி சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதிக்கு கொண்டு சென்றனர்.